என்.டி.ஆர். தோட்டங்கள்
என்டிஆர் தோட்டங்கள் என்பது ஒரு சிறிய பொது, நகர்ப்புற பூங்காவாகும். இது, இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரிக்கு அருகில் 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1999ஆம் ஆண்டு முதல் பல கட்டங்களில் கட்டப்பட்ட இந்தப் பூங்கா, புவியியல் ரீதியாக நகரின் மையத்தில் அமைந்துள்ளது. மேலும் பிர்லா மந்திர், நெக்லஸ் சாலை மற்றும் லும்பினி பூங்கா போன்ற பிற சுற்றுலா தலங்களுக்கு அருகில் உள்ளது. இது புத்த பூர்ணிமா திட்ட ஆணையத்தால் பராமரிக்கப்படுகிறது. இது தெலங்காணா அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
Read article